October 18, 2026
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் செலவில் இரண்டாம் தேனிலவு – ஆர்யாவின் அட்டகாச திட்டம்

திரை வாழ்க்கையில் பெயர் பெற்ற ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் நாயகன் ஆர்யா.நாயகி சாயிஷா.

ஆர்யாவின் நடிப்பிற்கு தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன்.

இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது

இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும்.

அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி அமைந்திருக்கிறது.

ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் யுவா இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளராக டி. இமான்.

திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் இந்தப்படத்தில் சண்டைப் பயிற்சி அமைக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த சிவநந்தீஸ்வரன் இந்தப்படத்தின் படத்தொகுப்பாளராகப் பணியாற்ற இருக்கிறார்.

இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது.

ஆர்யா சாயிஷா ஆகியோர் திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பதால் படத்தின் பலம் கூடியுள்ளது. படத்தில் கூடுதல் பலமாக நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், கருணாகரன் ஆகியோர் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் செல்வில் இரண்டாம் தேனிலவுக்குத் தயாராகிவிட்டது ஆர்யா சாயிஷா இணை.

Related Posts