சினிமா செய்திகள்

லியோ பாடல் வரிகள் மற்றும் காட்சி நீக்கம் – தணிக்கைத்துறை அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் காணொளி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வகையில், லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல் விரைவாக 10 கோடி பார்வைகளைக் கடந்து இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி’ பாடலில் இடம்பெற்றுள்ள ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க’,’மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவாண்டா’ உள்ளிட்ட சில வரிகளையும், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளையும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் நீக்கி உள்ளது .
இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தந்துள்ள சான்றிதழும் அது குறித்த தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமான இந்தப்பாடல் வரிகள் மற்றும் புகைபிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது மற்றோருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

Related Posts