துல்கர்சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால், தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடித் தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது.
வெற்றிப் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்து வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பது பல இயக்குநர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது.
ஆனால் இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாடல் மனதிற்கு வந்ததாம் இயக்குநருக்கு. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விடப் பொருத்தமானது வேறெதுவும் இல்லை என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளார்களாம்.
கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கும் இந்தப்படத்தை,இயக்குநர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
இப்படத்தின் முதல்பார்வை காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் நாள் வெளிவரவிருக்கிறது.











