சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் விழுந்தார் விஷால் – காதலி யார் தெரியுமா?

நடிகர் விஷால், சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரல்லட்சுமியை காதலித்து வந்தார் என்று சொல்லப்பட்டது.

அக்காதல் முறிவடைந்து இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின்,2019 ஆம் ஆண்டில்,
ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.

அவர்களின் நிச்சயதார்த்தம் 2019 மார்ச் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

அனிஷா ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் தொடர்பாக விஷால் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

விஷால் – அனிஷா ஆல்லா ரெட்டி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் 16.03.2019 அன்று மணமகள் வீடான ஹைதராபாத்தில் நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் அந்தத் திருமணமும் நடக்கவில்லை.

அந்தப்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், இப்போது விஷால் மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.

இம்முறை அவர் காதலிப்பதும் ஒரு நடிகையைத்தான்.

நாடோடிகள் உட்பட பல படங்களில் நடித்தவர் அபிநயா. வாய் பேசவியலாதவர்.

அவரைத்தான் விஷால் நேசிக்கிறாராம். விஷாலின் காதலை அவரும் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.

விரைவில் இவர்களுடைய திருமண அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் உயர்மட்ட இரகசியமாக உலவிக்கொண்டிருக்கும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts