சூர்யா 42 கடைசிநேர மாற்றம் – ஞானவேல்ராஜா மகிழ்ச்சி
சூர்யாவின் 42 ஆவது படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது.
சூர்யா, பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இப்போது அதில் மாற்றம் நடந்து, சிறுத்தைசிவா இயக்கும் படம் தொடங்குகிறது.
தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.அதன்பின் தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
ஆனால், கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோகிரின் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம் சூர்யா.இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் ஸ்டுடியோகிரின் ஞானவேல்ராஜா.
அப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னை இராமாவரத்திலுள்ள அகரம் ஃபவுண்டேசன் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில் சூர்யா, இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்,ஒளிப்பதிவாளர் வெற்றி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப்படத்தில் இந்திநடிகை திஷாபதானி நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஐந்து நாட்கள் நடக்கிறதாம். அதுமுடிந்ததும் சில நாட்கள் இடைவெளிவிட்டு கோவாவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.











