வதந்திகளைப் பொய்யாக்கி விஜய் 67 பட இசையமைப்பாளர் ஒப்பந்தம்
விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.
66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.
விஜய் 67 இன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மட்டும் உறுதியாகியிருந்த நிலையில் இப்போது இசையமைப்பாளரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாராம்.
மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் 67 படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கவிருக்கிறாராம்.
தயாரிப்பாளர் லலித்குமாரின் காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் இறுதிக்கட்டத்தில் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டபோது அனிருத், இயக்குநர் பக்கம் நின்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அனிருத் இருக்கமாட்டார் என்று ஆருடங்கள் சொல்லப்பட்டன. சாம்.சி.எஸ் இசையமைக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன.
ஆனால் தயாரிப்பாளர் லலித்குமாரோ, நாயகன் மற்றும் இயக்குநர் ஆகியோர் இந்தப்படத்துக்குப் பொருத்தமாக யார் இருப்பார் என்று நினைக்கிறார்களோ அவர்களுடன் பணிபுரியட்டும் என்று சொல்லிவிட்டாராம்.
அதனால் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படியும் விஜய்யின் ஒப்புதலோடும் அனிருத்தை இந்தப்படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.











