ஆர்யா படத்தின் தமிழக உரிமையைப் பெற்றார் உதயநிதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் கேப்டன். இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு,டி.இமான் இசையமைக்க, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார்.
நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.
இதன் படப்பிடிப்பு முடிந்து,அதற்குப் பிறகான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளீயீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.











