சினிமா செய்திகள்

பல படங்களில் நடிக்க மறுத்த கீர்த்திசுரேஷ் ஒப்புக்கொண்ட புதியபடம்

நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் படம், கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அவற்றில் ஒன்று, மாயா, கேம் ஓவர் மற்றும் இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் ஆகிய படங்களை இயக்கும்
அஸ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அந்தப்படத்தை ஒய்நாட் நிறுவனம் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறாராம்.

இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க கீர்த்திசுரேஷ் நடிக்கவிருக்கிறாராம். அவரிடம் கதைசொல்லி ஒப்பந்தமும் செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அண்மைக்காலமாக பல படங்களை வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிராகரித்துவந்தார் கீர்த்திசுரேஷ். இந்நிலையில் ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

இந்தப்படத்தின் கதை மிகவும் சிறப்பாக இருக்கிறது என்பதோடு படத்தில் ஜீவாவின் பாத்திரத்தைவிட இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஜீவாவுக்கு இணையாக நடிக்க கீர்த்திசுரேஷ் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts