செய்திக் குறிப்புகள்

20 ஆண்டுகள் 50 படங்கள் – நடிகர் பரத்தின் பயணத்தில் இணைந்த ஆர்பி.பாலா

ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். அதில் அறிமுகமானவர் நடிகர் பரத்.அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள பரத்தின் 50 ஆவது படத்தின் பூஜை நேற்று (மார்ச்16,2022) நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து
இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ரான்னி ரபேல் (மரைக்காயர்) இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு அஜய் மனோஜ், கலை இயக்கம் சுரேஷ் கசம்பு என திறமையான தொழில்நுட்பக்கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள பரத்தின் திரைப்பயணத்தில் ஐம்பதாவது படம் இது. இதில் அவருடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் ஆர்.பி.பாலா.

Related Posts