சினிமா செய்திகள்

கமல் படத்தில் அமிதாப்பச்சன்

கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் ஏற்கெனவே பெரும் நடிகர் பட்டாளம் இருக்கிறது. இருந்தாலும் திரைக்கதைப்படி படம் முடியும் தறுவாயில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் பெரிய நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் எனப் படக்குழுவினர் சொன்னார்களாம்.

அதில் நடிக்க, இந்தி நடிகர் அமிதாப்பச்சனிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒப்புக்கொண்டு நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அவரை வைத்து மிக இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என்றும் இனிமேல்தான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்றும் இருவேறு தகவல்கள் இருக்கின்றன.

இதனால், படத்துக்கு மதிப்பு கூடிம் என்பதோடு இந்தி வியாபாரமும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts