புத்தராக நடிக்கிறார் சிம்பு
சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனாகுமார் அவருக்கு 49 ஆவது படமாம். அதற்கடுத்து ஐம்பதாவது படம். அது குறிப்பிடத்தக்க படமாக இருக்கவேண்டும் என்று சிம்பு விரும்பியிருக்கிறார்.
அவர் விருப்பத்துக்கேற்ற கதையை இயக்குநர் ராம் சொல்லியிருக்கிறார்.
அப்படி என்ன கதை?
அரசராக இருந்த சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறி உண்மையைத் தேடிக் கண்டடைந்தபோது புத்தரானார்.
அந்த புத்தரைப் பிரதியெடுக்கிற மாதிரி சிம்புவின் வேடத்தை வடிவமைத்திருக்கிறார் ராம்.
இது சிம்புவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதால் அதுவே ஐம்பதாவது படமாக இருக்கட்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
பத்துதல, கொரோனா குமார் ஆகிய படங்களை சிம்பு முடித்துவிட்டு வரவும் நிவின்பாலி படத்தை முடித்துவிட்டு ராம் வரவும் சரியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சிம்பு மனசுல என்னவோ இருக்கு.











