September 16, 2026
செய்திக் குறிப்புகள்

நிவின்பாலியின் மஹாவீர்யார் – முதல்பார்வை வெளியானது

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் கதையிலிருந்து தழுவி உருவாகியிருக்கும் படம் மஹாவீர்யார்.

அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இப்படத்தில், நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்குமென்று திரைப்படக்குழு கூறுகிறது.

பாலி ஜே ஆர் பிக்சர்ஸ் (Pauly Jr Pictures) நிறுவனம் சார்பில் நிவின் பாலி மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் (Indian Movie Makers) சார்பில் பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
 
கொச்சியில் இன்று நடைபெற்ற விழாவினில் எழுத்தாளர் எம்.முகுந்தன் இப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார்.

திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா மற்றும் இணை தயாரிப்பாளர் பிஎஸ்.சம்னாஸ் ஆகியோர் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜு ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் மஹாவீர்யார்.

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர்  அப்ரித் ஷைனி ஆகியோர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், இராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் எஸ். குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு, ஷைலஜா பி.அம்பு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் சாப்ரா இசையமைத்துள்ளார்,படத்தொகுப்பை மனோஜ் செய்துள்ளார்.

இப்படத்தின் முதல்பார்வை இன்று மாலை 7 மணிக்கு வெளியானதும் நிவின்பாலி இரசிகர்கள் அதைக் கொண்டாடிவருகிறார்கள்.

Related Posts