பிரபுதேவாவின் பாராட்டைப் பெற்ற அமீரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமீரா தஸ்தூர், ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹீரா’. பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது.
அவற்றையெல்லாம் கடந்து,தற்போது கதாப்பத்திரத்தைச் சிறப்பாகச் செய்ததாக பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
அமீரா குறித்து இயக்குநர் ஆதிக் கூறுகையில்… …
அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், மாஸ்டர் ( பிரபுதேவா) உடன் அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்றார்.
இப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 8 மாலை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.











