செய்திக் குறிப்புகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திரைப்பட இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் அனைத்துத் தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்த்திரையுலகில், காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தைப் போக்கும் படி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெரும் நட்சத்திரக் கூட்டணியில், அழகான காதல் கவிதையாக, மனம் விட்டுச் சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்த நிலையில் அதற்குப் பிறகான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இப்படத்திற்கு, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க,சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார்.

இப்படம் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர்…

Related Posts