சினிமா செய்திகள்

இரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம்

அண்மையில் வெளியான ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் சாணிக்காயிதம்.

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்திசுரேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன.

இப்படத்தில் செல்வராகவனும் கீர்த்திசுரேஷும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறார்களாம்.

படத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக வருகிறார்களாம்.

அண்ணன் தங்கை என்றால் பாசமலர் அண்ணன் தங்கை போல் அல்லவாம். அப்பா ஒருவர் அம்மா வேறொருவர் என்பதால் தங்கையை வெறுக்கிற அண்ணனாக வருகிறாராம் செல்வராகவன்.

அந்நிலையில் தங்கைக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அச்சிக்கலையடுத்து இருவரும் சேர்ந்து பலரைப் பழிதீர்க்கிறார்களாம்.

இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், ராக்கி படம் போல் இப்படத்தில் இரத்தம் அளவுக்கதிகமாகத் தெறிக்கிறதாம்.

இதனால், குடும்பம் குழந்தைகளோடு இப்படத்தைப் பார்க்கவியலாது என்கிறார்கள்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் ராக்கி படத்திலும் அளவுக்கதிகமான வன்முறை அடுத்த படத்திலும் அப்படியே இருக்கிறதென விவரமறிந்தவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Related Posts