சினிமா செய்திகள் நடிகர்

தனுஷை மிஞ்சிய விஜய்சேதுபதி

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் .

கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25 இலட்சம், தனுஷ் 15 இலட்சம் நிதி கொடுத்தனர். நடிகர் விஜயசேதுபதி 25 இலட்சம் கொடுத்துள்ளார்.

இதனால் கமல், சூர்யா வரிசையில் விஜய்சேதுபதி சேர்ந்திருக்கிறார் என்றும் தனுஷைவிட அதிகமாக நன்கொடை கொடுத்திருக்கிறார் என்றும் பேசுகிறார்கள்.

Related Posts