சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ரவிவர்மன் ஒப்புக்கொண்ட படம்

குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் இந்தித் திரையுலகிலும் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ரவிவர்மன், இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கடுத்து பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தபோதும், ஏற்கெனவே தேதிச் சிக்கலால் விலகிய இந்தியன் 2 படத்தில் பணியாற்றும் வாய்ப்பு இருந்தபோதும் அவர் கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் பணிபுரிய ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அதற்குக் காரணம் படத்தின் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.

ராஜுமுருகன் கார்த்தி படத்தில் ரவிவர்மன் இணைந்திருப்பதால் அப்படத்தின் மதிப்பு பன்மடங்கு கூடியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

Related Posts