காலாவை அடுத்து விஜய்யை இயக்குகிறார் பா.ரஞ்சித்?
அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய அப்படம் வெற்றி பெற்றதால், கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றதால் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா.ரஞ்சித்.
அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார்?
சூர்யாவை வைத்துப் படம் இயக்கப்போகிறார் என்கிற பேச்சுகள் இருந்தன. அது உறுதியாகாமல் இருந்தது.
இப்போது அதிரடித் திருப்பமாக நடிகர் விஜய்யைச் சந்தித்திருக்கிறார் பா.ரஞ்சித்.
விஜய்யின் அடையாறு அலுவலகத்தில் நடந்த சந்திப்பில், ஒரு கதையின் மையத்தை விஜய்க்குச் சொன்னதாகவும் அது அவருக்குப் பிடித்திருந்தது என்றும் சொல்கிறார்கள்.
இதனால் பா.ரஞ்சித் அடுத்து விஜய்யை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்று பேச்சு பரவலாக அடிபடுகிறது.











