பாரதிராஜா பாலா ஆகியோர் கைவிட்டதைப் பிடிக்கும் சசிகுமார்
தமிழின் முன்னணி இயக்குநர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது.
வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளையும் இயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்தார்கள்.
அதற்காக, தேனியில் பெரிய அளவில் தொடக்கவிழாவெல்லாம் நடத்தினார்கள்.உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
ஆனால் அதோடு அப்படியே நின்று போனது.
இப்போது குற்றப்பரம்பரைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் சசிகுமார்.
வேலராமமூர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகுமார் இயக்கத்தில் அவரே நடிப்பது அல்லது இயக்கம் மட்டும் செய்து வேறு நடிகர்களை நடிக்கவைப்பது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடந்து வருகிறதாம்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.











