சினிமா செய்திகள்

விஜய் 120 கோடி சமந்தா 200 கோடி – தகவல்களுக்குப் பின்னால் ஓர் அதிர்ச்சித்தகவல்

நாகசைதன்யா – சமந்தா திருமண முறிவு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளீயான பிறகு அதுகுறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று..

சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகசைத்தன்யாவின் குடும்பத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட தனக்கு வேண்டாம் என்றும், தனது கடின முயற்சியின் மூலம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்ததாலும், தன்னால் சுயமாக வாழ முடியும் என சமந்தா அந்த 200 கோடி ரூபாய் தொகையை ஏற்க மறுத்ததற்காக காரணமாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படி ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் வெளியான தகவலொன்றில்….

விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார். விஜய் 66 படத்தை ‘தோழா’ பட இயக்குநர் வம்சி இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்தப் படத்துக்கு விஜய்யின் சம்பளம் 120 கோடி எனும் தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.

இந்தத் தகவல் பரபரப்பாகப் பரப்பப்பட்டது.

இவ்விரண்டு தகவல்களும் ஒரே இடத்தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

பல தமிழ்த் தயாரிப்பாளர்கள் விஜய்க்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குப் படம் நடிப்பதா? என்கிற விமர்சனங்கள் வரத்தொடங்கியபோதுதான், விஜய்யின் சம்பளம் 120 கோடி என்கிற தகவல் வெளியானது. எல்லோரும் விஜய் சம்பளத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க விஜய் தெலுங்குத் தயாரிப்பாளருக்குத் தேதி கொடுத்த விசயம் பின்னுக்குப் போனது.

அதேபோல், இப்போது சமந்தாவின் திருமண முறிவுக்குக் காரணம் சமந்தாவின் கட்டுப்பாடின்மைதான் என்கிற விமர்சனங்கள் வரத் தொடங்கிய நேரத்தில்தான், சமந்தாவுக்கு 200 கோடி ஜீவனாம்சம் என்கிற தகவல் வெளியாகிறது.

இணையதளங்களில் இவ்வாறான பொய்ச்செய்திகளைப் பரப்புவதற்கென்றே ஒருவர் வேலை செய்துகொண்டிருப்பதாகவும் அவரிடம் பணம் கொடுத்துத்தான் விஜய் மற்றும் சமந்தா ஆகியோர் இம்மாதிரியான பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

எப்படியெல்லாம் கம்பி கட்டுறாங்க பாருங்க!

Related Posts