சினிமா செய்திகள்

விஷால் 32 படம் இன்று தொடக்கம்

விஷால் இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி மற்றும் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

விஷாலின் 31 ஆவது படம் என்று சொல்லப்படும் வீரமே வாகை சூடும் படத்தின் பெயரும் முதல்பார்வையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால் பிறந்தநாளையொட்டி வெளியானது.

இந்நிலையில், இன்று விஷால் நடிக்கும் 32 ஆவது படத்தின் தொடக்கவிழா நடந்தது.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிறுவனம் தான் விஷால்32 படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, விஷால் பங்கு பெற்ற “சன் நாம் ஒருவர்” நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது.

இப்போது இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்
இன்று ஆரம்பமானது.

இந்தப்படத்தில் நாயகியாக சுனைனா நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஏ.வினோத்குமாரரும் பொன்பார்த்திபனும் இணைந்து வசனங்களை எழுதுகிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related Posts