விஷாலின் 32 ஆவது படம் லத்தி. இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்
விஷால் இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி மற்றும் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விஷாலின் 31 ஆவது படம் என்று சொல்லப்படும் வீரமே வாகை சூடும் படத்தின் பெயரும் முதல்பார்வையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால்













