சினிமா செய்திகள்

தயாரிப்பாளருக்கு பிபி எகிறல் கண்ணீர் விட்ட இயக்குநர் – காரணம் விஷால்

இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.அந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துபாயில் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ளது.

புகைப்படத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.

அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துபாயில் நடந்து முடிந்திருக்கிறது.

அங்கு படப்பிடிப்பு தொடங்கியபோது சொன்னதைவிட சில நாட்கள் தாமதமாகச் சென்றாராம் நாயகன் விஷால்.

அங்கு போனவுடன் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், அப்புறம் காணாமல் போய்விட்டாராம். மூன்று நாட்கள் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.மூன்று நாட்களுக்குப் பின் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

அதுமட்டுமல்ல, காலை ஏழு மணிக்கு விஷால் ஆர்யா இருவரும் நடிக்கவேண்டிய காட்சியின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டால், ஏழு மணிக்கு ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக இருப்பார்களாம். விஷால் மட்டும் 11 மணிக்கு மேல்தான் வருவாராம்.

இப்படியே ஒவ்வொருநாளும் அவர் தாமதமாகவே வந்ததால் திட்டமிட்டதைவிட பத்துநாட்கள் அதிகமாகப் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருந்ததாம்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் வினோத்துக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியன அதிகமாகி சிகிச்சை எடுக்க வேண்டியிருந்ததாம்.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் கண்ணீர் விடாத குறையாகக் கலங்கி நின்றாராம்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்திலும் நான்கு நாட்கள் விஷால் படப்பிடிப்புக்கு வராமல் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பத்துநாட்கள் மட்டும் படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம். எப்படியாவது அதை முடித்துவிட வேண்டும் என்பதற்காக ஆத்திரங்களை அடக்கிக் கொண்டு வேலை பார்க்கிறதாம் படக்குழு.

Related Posts