சினிமா செய்திகள்

ஓடிடியில் பூமி படம் – விலை எவ்வளவு தெரியுமா?

ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இத்திரைப்படம் பொங்கல் திருநாளையொட்டி நேரடியாக இணையதளத்தில் நாளை வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிட படக்குழுவினர் நாற்பது கோடி கேட்டதாகச் சொல்லப்பட்டது. அவ்வளவு தொகையைத் தர இணைய நிறுவனம் தயாராக இல்லையென்பதால் தாமதம் ஆனது.

கடைசியாக முப்பது கோடி கொடுத்து வெளீயீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழ் மட்டுமின்றி மேலும் இரு மொழிகளில் படத்தை வெளியிடவும் சேர்த்தே இந்தத் தொகை என்றும் சொல்லப்படுகிறது.

மூன்று மொழிகளில் இணையம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக முப்பது கோடி என்பது குறைவான தொகை என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலை போலவே விவசாயம் பற்றிய படத்தின் நிலையும் அமைந்துவிட்டதோ?

Related Posts