அரவிந்த்சாமி கருத்துக்கு எனிமி தயாரிப்பாளர் பதிலடி
திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று நடிகர் அரவிந்த்சாமி திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இப்போது 50 விழுக்காடு இருக்கைகள் நிரப்புவதுதான் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக்குறிப்பிட்டு, விஷால் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள பதிவில்..
எம்டிசி பேருந்துகள் 100% உடன் இயங்கத் தொடங்கியபோது இதை ஏன் சொல்லவில்லை? ரயில்கள், விமானங்கள், மால்கள்., டாஸ்மாக், அரசியல் கூட்டங்கள், விடுதிகள் போன்றவை முழுமையாக இயங்கும்போது ஏன் சினிமா மட்டும் இயங்கக்கூடாது ?மக்கள் விரும்பினால் வீட்டிலேயே இருக்க முடியும், தியேட்டர்களுக்கு செல்ல யாரும்யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
அரவிந்த்சாமியின் கருத்துக்கான பின்னூட்டங்களில், கடும் எதிர்ப்பு இருக்கிறது.











