கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ராந்த் ஐஸ்வர்யா ராஜேஷ்
சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா.
தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும் அக்குறும்படங்களைப் பிரபல இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்கள்.
கெளதம்மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் அந்த ஒன்பது இயக்குநர்களில் அடக்கம் என்று சொல்லப்பட்டது.
இப்போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். அவர் இயக்கும் படத்தில் நாயகனாக விக்ராந்தும் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருக்கிறார்களாம்.
சமுதாய அக்கறையுடன் அமைக்கப்பட்டுள்ள கதைக்கரு என்பதால் இப்படம் மிகவும் பேசப்படும் என்று சொல்கிறார்கள்.
ஓரிருநாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.











