சினிமா செய்திகள்

மனம் மாறிய இயக்குநர் ஏமாந்த பிரியாபவானிசங்கர்

விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார்.

கிராமத்துக்கதைகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா,இதையும் கிராமத்துப்படமாக எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. படத்துக்கு பேச்சி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக இலட்சுமிமேனன் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இலட்சுமிமேனன் ஏற்கெனவே முத்தையா இயக்கிய குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மைக்காலமாக படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இந்தப்படம் மூலம் மீண்டும் நடிக்கவருகிறார் என்று சொல்லப்பட்டது.

இலட்சுமிமேனனோ, முப்பத்தைந்து இலட்சம் சம்பளம்,இவ்வளவு உதவியாளர்கள் அவர்களுக்கு இவ்வளவு சம்பளம், ஒப்பனை முழுக்க ஏன்னுடைய விருப்பம் ஆகியன உட்பட பல நிபந்தனைகள் விதித்தாராம்.

இதனால் அவரை நீக்கிவிட்டு பிரியாபவானிசங்கரை நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கிடையே இலட்சுமிமேனன் தன்னுடைய நிபந்தனைகளிலிருந்து இறங்கிவந்ததாகத் தெரிகிறது. சன் பிக்சர்ஸும் இலட்சுமிமேனன் நடிக்கவேண்டும் என்றே விரும்பியதாம்.

இதனால் இயக்குநர் முத்தையாவும் மனம்மாறி இலட்சுமிமேனனே நடிக்கட்டும் என்று ஒப்புக்கொண்டு உறுதிசெய்துவிட்டாராம்.

இதனால் இப்படம் நமக்குக் கிடைக்கும் என்று நம்பியிருந்த பிரியாபவானிசங்கர் ஏமாந்துபோய்விட்டார் என்கிறார்கள்.

Related Posts