சினிமா செய்திகள்

ரஜினியின் 2ஓ பட டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்டது இவர்களா?- அதிர்ச்சியில் சுபாஷ்கரன்

சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

மற்றொரு பிரமாண்ட விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது.

சமூக வலைதளங்களில் வெளிவந்த அந்த டீசர் ஏதோ ஒரு வெளிநாட்டில் எல்.ஈ.டி-யில் திரையிடப்பட்டபோது, கேமரா மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையற்ற டீசராக அது இருந்தது.

எங்கிருந்து அது எடுக்கப்பட்டது? இது இலண்டனில் மார்ச் 2 ஆம் தேதி நடந்த லைகாநிறுவனர் சுபாஷ்கரன் பிறந்தநாள் விழாவின் போது திரையிடப்பட்டதாம். தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்ட இந்நிகழ்விலிருந்துதான் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய சுபாஷ்கரன், தன்னுடைய பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிய அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 ஓ படத்தின் டீசரை திரையிட்டிருக்கிறார்.12 மணிக்குத் திரையிடப்பட்ட டீசர் ஒரு மணிக்கு இணையங்களில் வந்துவிட்டது.

இணையங்களில் டீசர் ஓடுவதைக் க்ண்டு அதிர்ச்சியடைந்த சுபாஷ்கரன், நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்தவர்கள் யார்? யார்? என்கிற பட்டியலை எடுத்ததோடு அங்கிருந்த சிசிடிவி மூலம் யார் அதைப் படம் பிடித்தது? என்பதைக் கண்டறிந்துவிட்டார்களாம்.

உற்சாக பானத்தில் கூடுதல் உற்சாகமாயிருந்த லைகா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறுபேர், அந்த டீசரை கைபேசியில் பதிவு செய்து இணையத்தில் ஏற்றிவிட்டார்களாம்.

தம் அலுவலகத்தில் பணியாற்றுகிறவர்களே இதைச் செய்தார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுபாஷ்கரன், உடனடியாக அவர்களை வேலையில் இருந்து நீக்கியதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சொல்லியிருக்கிறாராம்.

Related Posts