சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு விசயத்தில் விஷால் அமைதியாக இருப்பது ஏன்?

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நட்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரணை நடத்தி சிம்பு, ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்ததாம்.

அதுபற்றி அலட்டிக்கொள்ளாத சிம்பு, மணிரத்னம் படம் அதைத்தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கும் படம் ஆகியனவற்றில் நடிக்கிறார்.

இதற்கு மைக்கேல் ராயப்பன் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

சிம்புவால் நஷ்டமடைந்ததற்கு எனக்கு நியாயம் வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இருக்கிறேன். எனது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் சிம்பு வேறு படங்களில் நடிக்கக்கூடாது. இப்போது அவர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்புகொண்டு மீண்டும் புகார் செய்து இருக்கிறேன். படப்பிடிப்பு நடத்த அனுமதிக்ககூடாது. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து எந்தக்கருத்தும் சொல்லவில்லையாம்.

எல்லாவற்றையும் சரி செய்யவேண்டும் என்று வந்த விஷால் சிம்பு விசயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?

தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் இது பற்றி விசாரித்தால்,

சிம்புவை வைத்து மணிரத்னம் படமெடுத்தார். மணிரத்னத்திடம் போய் இதுபற்றியெல்லாம் பேசவே முடியாது, அந்தப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது, எடுத்தவரை விட்டுவிட்டு வெளியிடுபவரிடம் பேசமுடியாது என்று விட்டுவிட்டார்கள்.

சிம்பு இப்போது நடிப்பது லைகா தயாரிப்பு.

இந்நிறுவனத்திடம் விஷால் பெரும்தொகை வட்டியில்லாக் கடனாகப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்நிறுவனத்திடமும் கறாராகப் பேசமுடியாது என்கிற நிலை.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இப்படி தனிப்பட்ட முறையில் சிக்கலில் சிக்கி இருப்பதால் பொது விசயத்தில் சரியானதைப் பேச முடியவில்லை என்கிறார்கள்.

Related Posts