செய்திக் குறிப்புகள்

13 ஆண்டுகளில் 25 படங்கள் – விக்ரம்பிரபுவுடன் ஓர் உரையாடல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சிறை. இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு காவல்ரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிறை படம் விக்ரம் பிரபுவின் 25 ஆவது படம்.

2012 ஆம் ஆண்டு முதல்படம் கும்கி வெளியானது.13 ஆண்டுகளில் 25 ஆவது படத்தைத் தொட்டிருக்கிறார்.

அவருடன் ஓர் உரையாடல்…

1.சிறை படம் குறித்து…

டாணாக்காரன் இயக்குநர் தமிழ்,அவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடித்தேன்.அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.அவர், இந்தக் கதையை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.இது காவல்துறை அதிகாரியாக நான் நடிக்கும் நான்காவது படம்.முந்தைய படங்களிலிருந்து என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தைப் பார்ப்பீர்கள்.இதில் நடிக்க 15 கிலோ எடை அதி​கரிச்​சேன்.காவல்துறைக்​குள்​ளேயே இருந்து ஊறியவன், அவன் மனநிலை, அவன்
மற்​றவங்​களை எப்​படிப் பார்க்​கிறான் ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.

2.தயாரிப்பாளர் மகனும் படத்தில் இருக்கிறாரே?

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமார் மகன் எல்.கே.அக்‌ஷய் குமார் இதில் நடித்திருக்கிறார். கமர்சியல் படத்தில் அறிமுகப்படுத்தம்ணு நினைக்காம ஒரு நல்ல படத்​துல அறி​முக​மாகணும்னு நினைச்சு நடித்திருக்கிறார்.அர்த்​த​முள்ள இந்​தக் கதை​யில ஏற்றிருக்கும் வேடத்துக்காக ரொம்ப உழைச்​சிருக்கார்.அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, இதை விட அதிகமாக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன், இதை விட இன்னும் அதிகம் இருக்கும் என்று கூறினேன். அனிஷா உள்பட இதுல நடித்திருக்கிற எல்​லோருமே அருமையா நடிச்​சிருக்​காங்க.

3.படத்தில் உள்ள அரசியலை உணர்ந்து நடித்தீர்களா? அல்லது இயக்குநர் சொன்னதை மட்டும் செய்தீர்களா?

இயக்குநர் சொன்னதை வைத்து நடித்திருக்கிறேன்.இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால்,நான் தமிழின் உடல் மொழியை பின்பற்றினேன். அவரிடமிருந்து இந்த கதாபாத்திரத்திற்காக சில விசயங்களை எடுத்துக் கொண்டேன்.நிச்சயம் இந்த கதாபாத்திரம் எனக்கும்,என் இரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.

4.இது உங்கள் 25 ஆவது படம்.அதுகுறித்து.?

என்​னுடைய 25 ஆவது படம், 2025 ஆவது வருடம் 25 ஆம் தேதி வெளியாகுது.மகிழ்ச்​சியா இருக்​கு.கும்​கி​யில இருந்து சினிமா
வாழ்க்​கையைத் தொடங்​கினேன்.அதுக்​குள்ள காலம் வேகமா ஓடி​யிருக்​கு. சினி​மாவுக்கு வந்து 13 வருடம் ஆச்​சு. நடு​வுல கோவிட்ல 2 வருடம் போயிடுச்​சு. ஆரம்​பத்​துல இருந்தே,என் படங்கள் கமர்​ஷிய​லாக​வும் இருக்​கணும், அதே நேரத்​துல நல்ல கதை​யும்
சொல்​லணும். ஒரு அனுபவமாக​வும் இருக்​கணும்னு நினைச்​சு​தான் படங்களை ஒப்புக்கொள்வேன்.சில நேரங்களில், என் விருப்​பத்தை மீறி சில கட்​டா​யத்​துக்​குள்ள விழுந்​திருக்​கேன்.எனக்கு இருக்​கிற அழுத்​தம் சினி​மாவுல மூன்​றாவது தலை​முறை நடிகன் அப்​படிங்​கறது​தான். தாத்தா (சி​வாஜி கணேசன்) படங்​கள் பண்​ணின வேகத்​துக்​கும், அப்பா (பிரபு) படங்​கள்ல நடிச்ச வேகத்​துக்​கும், நான் இப்ப பண்​றதுக்​கும் நிறைய வித்​தி​யாசம் இருக்​கு.அப்​படித்​தான் சினி​மா​வும் வளர்ந்​திருக்​கு. இந்த நேரத்​துல 25 படங்​களை கடந்​திருப்பது பெரிய விசயம் என்றுதான் நான் பார்க்கிறேன்.

5.படங்களைத் தேர்வு செய்வது எப்படி?

கொரானாவுக்கு பிறகு பார்​வை​யாளர்​கள் வெவ்​வேறு வித​மான கதைகளை விரும்ப ஆரம்​பிச்​சிருக்​காங்க. நல்ல கதைகளைத் தேடறாங்க. அது ஒரு வகை​யில நடிகர்​களுக்​கும் இயக்​குநர்​களுக்​கும் சினிமா துறைக்கும் நல்ல விசயம். இதைத்​தான் நான் ஆரம்​பத்​துல இருந்தே முயற்சி பண்​ணிட்​டிருந்​தேன். அது இப்ப நடக்​குது. க்ரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்தால், இப்படியே நடிப்பது ஏன்? என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே என்று சொல்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். அனைத்துக் கதைக்களங்களிலும் நடிக்கவேண்டும்.அனைத்தும் நடிப்புதான், அனைத்தும் கதாபாத்திரங்கள்தான்.அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

6.அடுத்தடுத்த திட்டங்கள்..?

அடுத்து என்ன பண்​ணப்போறேன்னு கேட்​டா என்​கிட்ட அப்​படி எது​வும் இல்​லை. இன்​னைக்கு இப்ப இருக்​கிறதையே நான் திட்​ட​மிடலை. நான், ரொம்ப எதை​யும் யோசிக்க மாட்​டேன். அன்​னன்​னைக்கு என்ன பண்​ணணுமோ? அதை மட்​டுமே பார்ப்​பேன். அதி​கம் எதிர்​பார்த்​தா, அதுவே சில நேரம் ஏமாற்​ற​மா​யிடும்.சினி​மாங்​கறது கற்​றல். சினி​மாவுக்கு வந்த இத்​தனை வருசத்​துல நான் தெரிந்து கொண்ட விசயங்​களை அடுத்​தடுத்த வருடங்​கள்ல இன்​னும் சிறப்பா பயன்​படுத்துவேன்.

– யுவராஜ்

Related Posts