November 1, 2025
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பாண்டிராஜ் இணையும் அடுத்த படத்தில் சிக்கலா? – என்ன நடக்கிறது?

ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்தது.இப்போது வரை சுமார் 75 கோடி வசூல் செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது.

ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப் பெற்று படக்குழுவுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதன் உடனடி விளைவாக மீண்டும் பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணி உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.

தலைவன் தலைவி படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.இப்போது மீண்டும் அவர்கள் இணையும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இந்தக் கூட்டணியில் மணிகண்டனும் இணையவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏனென்று கேட்டால்? இந்தப்படத்தின் மொத்தச் செலவுத் தொகை தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தலைவன் தலைவி படத்தை மொத்தம் முப்பத்தைந்து கோடியில் முடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.இப்போது இந்தப்படத்துக்கு அப்படியே இரண்டு மடங்காக்கி மொத்தச் செலவுத் தொகை எழுபது கோடி ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தொகையில்,விஜய்சேதுபதி, பாண்டிராஜ் ஆகியோருக்கு தலைவன் தலைவி படத்தை விட இரட்டிப்பு சம்பளம் என்பதுதான் மொத்தச் செலவு எகிறக் காரணாமாக இருந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில், செலவைக் குறைக்க அதாவது விஜய்சேதுபதி மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் இப்போது கேட்கும் சம்பளத்தைவிடச் சற்றுக் குறைத்துக் கொள்ளச் சொல்லி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாவிட்டால் பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணி அப்படியே வேறு நிறுவனத்தை நாடவும் திட்டம் வைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக லைகா நிறுவனத்தின் தரப்பில் விசாரித்தால், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை நாங்கள்தான் தயாரிக்கிறோம்.இயக்குநர் இரண்டுக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லியிருக்கிறார்.அவற்றில் பெரிய செலவு பிடிக்கும் கதையும் இருக்கிறது.எந்தக் கதையை இறுதி செய்கிறோம் என்பதைப் பொறுத்து பட்ஜெட் இருக்கும். விரைவில் அது குறித்து முடிவெடுத்துவிடுவோம். ஆடி மாதம் முடிந்ததும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts