சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் ஷங்கர் விஜய் கூட்டணி – கமல் அதிர்ச்சி

இயக்குநர் ஷங்கர் இப்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது.

அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள்.

இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம்.

இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.

முதல்வன் 2 படத்தின் நாயகன் யார் தெரியுமா? விஜய்.

அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் ஷங்கர் முழுமையாகத் தயாராகிவிடுவார், இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

தொடக்க நிலை பேச்சுவார்த்தையில் இருக்கும் இப்படம் வேகமாக வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ஏற்கெனவே நண்பன் படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியன் 2 நடக்காது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை அறிந்த கமல் அதிர்சியடைந்திருக்கிறாராம்.

Related Posts