October 16, 2026
சினிமா செய்திகள்

வலிமை படத்தில் அஜீத்தின் வேடமும் அதனால் ஏற்பட்டுள்ள விவாதமும்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் வேலைகள் நிறைவடைந்து படம் தயாராகிவிட்டதாம். படத்தில் இன்னும் ஒரு துரத்தலுடன் கூடிய சண்டைக்காட்சியைச் சேர்ப்பதா? வேண்டாமா? என்கிற விவாதம் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

படத்தில் அஜித், காவல்துறை உதவி ஆய்வாளராக (சப் இன்ஸ்பெக்டர்) நடித்திருக்கிறாராம். அதேசமயம் படத்தின் காட்சிகள் அதிஉயர் காவல் அதிகாரிகளின் செயல்பாடுகள் போல் உயர்ந்த தரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால்தான், அடித்தட்டு மக்களுக்கும் சேரும்படியாக ஓர் அதிரடி சண்டைக்காட்சியைப் படமாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் படம் க்ளாஸா இருந்தாலும் நேர்த்தியாக இருக்கிறது. இப்படியே இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

எது எப்படியிருந்தாலும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை கண்டிப்பாக வெளியிட்டுவிடுவதென உறுதியாக இருக்கிறார்களாம்.

கொரோனா இரண்டாம் அலை சிக்கல் சீக்கிரமாக முடிவுக்கு வராவிட்டால் இதில் மாற்றம் ஏற்படக்கூடும் என்கிறார்கள்.

Related Posts