வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் – படக்குழு அதிர்ச்சி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை.
அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்துக்குத் தணிக்கைத்துறை வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்கிற ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
ஏனெனில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் 18 வயதுக்குட்பட்டோரை உறுதியாக அனுமதிக்க மாட்டார்கள்.
தனுஷ் ரசிகர் பட்டாளத்தில் பாதிக்கு மேல் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள்தாம். அதோடு தனுஷ் படம் என்றால் குடும்பத்தோடு படம் பார்க்கலாம் என்று நினைப்பவர்களும் குழந்தைகளை அழைத்துவர இயலாது எனும் நிலை.
இதனால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்கிற பதட்டத்தில் இருக்கிறார்களாம்.











