சண்டக்கோழி 2 இல் எனக்கு நிறைய சவால்கள் – வரலட்சுமி வெளிப்படை
விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் வரலட்சுமிசரத்குமார் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது…
சண்டக்கோழி2 திரைப்படத்தில் வேலைபார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது.
லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர்.
சண்டக்கோழி2-வில் நான் கம்போர்ட் சோணிலிருந்து வெளியேவந்து நடித்துள்ளேன்.
நாங்கள் திண்டுக்கல், காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே நிறைய தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம்.
கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.
படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் டேன் ஏற்பட்டது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது
இவ்வாறு வரலட்சுமி கூறினார்.











