செய்திக் குறிப்புகள்

பரபரப்பான அனுபவம் தரும் படம் – தயாரிப்பாளர் உறுதி

தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில மிகவும் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படம் ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம் (ROOT – Running Out of Time).

இந்தப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.இப்படம் மூலம், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ்தித்ரையுலகில் அறிமுகமாகிறார்.இவர்களுடன்
பவ்யா திரிகா,ஒய்.ஜி.மகேந்திரா,பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா,படத்தொகுப்பு – ஜான் ஆபிரகாம்,இசை – அரன் ரே,சண்டைப்பயிற்சு – மிராக்கிள் மைக்கேல்,
கலை இயக்கம் – ஜகன் நந்தகோபால்,ஆடை வடிவமைப்பு – தீப்தி.ஆர்ஜே.

சூரியபிரதாப்.எஸ் எழுதி இயக்கியுள்ள இப்படம், சஸ்பென்ஸ், எமோஷனல் மற்றும் உயர்கருத்து கொண்ட கதை சொல்லலை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான திரைக்கதை மற்றும் திறமையான நடிகர்களின் சிறப்பான நடிப்புகளுடன் உருவாகியுள்ளது

வெரஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில்,ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர்,ராஜராஜன் ஞானசம்பந்தம்,தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், உயர்தரமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்தி படத்தை உருவாக்கி வருகிறது.

தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடியும் தீவிரமாகவும் போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மற்றும் பல்வேறு லொகேஷன்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, படம் தற்போது முழுமையான போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. எடிட்டிங், சவுண்ட் டிசைன், இசை அமைப்பு, விஎஃப்எக்ஸ் இணைப்பு மற்றும் டிஜ பணிகள் அனைத்தும் ஒரேநேரத்தில் விரைவாக நடைபெற்று வருகின்றன.

கற்பனை செய்யப்பட்ட அளவுக்கும் கனவுக்கும் இணையாக, ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை உருவாக்குவதே படக்குழுவின் இலக்காக உள்ளது.

படத்தின் உருவாக்கம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதில் தயாரிப்பாளர் ஷேக் முஜீப் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது,

போஸ்ட்-ப்ரொடக்‌ஷனில் தற்போது உருவாகி வரும் அவுட்புட்டால் நாங்கள் மிகுந்த திருப்தியடைந்துள்ளோம். எடிட்டிங், பின்னணி இசை,விஎஃப்எக்ஸ்,சவுண்ட் டிசைன் என ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இப்படம், தொழில்நுட்ப ரீதியாக சவாலான திரைப்படம். அந்த சவால்களை துல்லியத்துடனும் அர்ப்பணிப்புடனும் படக்குழு எதிர்கொள்வதால்,நாங்கள் எதிர்பார்த்த தரத்தை அடைய முடிகிறது. ரஷ் காட்சிகளும் தற்போதைய கட்-களும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. பார்வையாளர்கள் திரையில் தீவிரமும் புதுமையும் நிறைந்த ஒரு அனுபவத்தை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.இரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமரவைக்கும் ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறோம் என நம்பிக்கையாகச் சொல்கிறார்.

நம்பிக்கை பலிக்கட்டும்.நல்லது நடக்கட்டும்.

Related Posts