விமர்சனம்

தீர்க்கதரிசி – திரைப்பட விமர்சனம்

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு பல குற்றங்கள் நடக்கின்றன. தொடக்கத்தில் அந்தத் தகவலை அலட்சியப்படுத்தும் காவல்துறை, ஊடகங்களுக்குச் செய்தி தெரிந்து சிக்கல் பெரிதானதும் தீவிரமாகக் களமிறங்குகிறது.

அதன்பின் என்ன நடக்கிறது? முன்கூட்டியே தகவல் சொல்லும் மர்மநபர் யார்? என்கிற இரகசியங்களை வெளிப்படுத்தும் படம் தீர்க்கதரிசி.

காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல், அவருக்கு இணையாக வரும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் ஆகிய மூவரும் சிரத்தையாக நடித்திருக்கிறார்கள்.

ஶ்ரீமனுக்கு இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அந்த வேடத்துக்கு முழு நியாயமாக நடித்திருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார்கள்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் சத்யராஜ், சிறப்பான வரவேற்பைப் பெறுகிறார்.

இலட்சுமணனின் ஒளிப்பதிவு, ஜி.பாலசுப்பிரமணியத்தின் இசை ஆகியன திரைக்கதையின் தன்மையை உயர்த்திக் காட்ட உதவியிருக்கின்றன.

படத்தொகுப்பு செய்திருக்கும் ரஞ்சித்.சி.கே வின் உழைப்பால் படம் விறுவிறுப்பாகப் போகின்றது.

ஒரு சில தவறுகளைத் தாண்டி நல்ல கருத்தோடு கதாநாயகி, காதல்பாடல்கள் ஆகியன இல்லையே என்கிற எண்ணமே வராமல் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர்கள் பி.ஜி.மோகன் மற்றும் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் ஆகியோர் அந்தப் பெருமைக்குரியவர்கள்.

– குமார்

Related Posts