விஜய் தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்கியவுடன் அது ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.
உதயநிதி, கீர்த்திசுரேஷ்,வடிவேலு, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாமன்னன். இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜூன் 29 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய படமாக இருந்தது. திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்றதையடுத்து ஜூலை 27 ஆம் தேதி
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில் கோலோச்சி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில்
தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்த அது ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய நெடுந்தொடரை 24 ஏப்ரல் 2023 திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது. இத்தொடரில் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபிஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி), வருண் உதய்(ஆதித்யா), சுனிதா (மிருணாளினி) மற்றும் பலர் நடிக்கிறார்கள். மோதலும்
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தனர். அந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிய வசூலையும் பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகத்தை
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது. தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற
தமிழ்த்தொலைக்காட்சிகளில் தொடங்கியதிலிருந்தே முதலிடத்தில் இருந்துவருகிறது சன் தொலைக்காட்சி. தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் வங்காளத்திலும் சன் குழுமம் தொலைக்காட்சிகளை நடத்திவருகிறது. இந்தியில் இந்நிறுவனம் வந்துவிடக்கூடாது என பல பெரிய நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வரவிடாமல் தடுத்துவருகின்றன என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது சன்குழுமத் தலைவர்
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சிக்குப் பெரும் பலமாக அமைந்த நிகழ்ச்சி. தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. இவ்வாண்டில் அதற்கு மிக நெருக்கமாக வந்துகொண்டிருந்தது விஜய் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சி 1100





















