சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்துக்குக் கிடைத்த 20 கோடி – விஜய்ஆண்டனி மகிழ்ச்சி

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தனர்.

அந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிய வசூலையும் பெற்றது.

அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முடிவுக்கு வந்தார் விஜய் ஆண்டனி. தொடக்கத்தில் அவர் கதை திரைக்கதை வசனம் எழுதுவது வேறொருவர் இயக்குவது என்று தொடங்கிய அந்தப்படம் சரியாக நடக்கவில்லை. இறுதியில் அவரே இயக்குநராகவும் மாறி அந்தப்படத்தை எடுத்துள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை நல்லவிலைக்கு விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிச்சைக்காரன் 2 படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சியும் இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றிருக்கிறது.

இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ள தொகை சுமார் இருபது கோடி என்று சொல்லப்படுகிறது.

இது நல்ல விலை என்பதால் பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts