செய்திக் குறிப்புகள்

திருமலை இயக்கியுள்ள மான்வேட்டை பட இசைவிழா – தொகுப்பு

அகம்புறம்,தீநகர்,காசேதான் கடவுளடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மான் வேட்டை”.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் வில்சன், வசனம் எழுதியிருப்பவர் வேலு சுப்பிரமணியம், படத்தொகுப்பு செய்திருப்பவர் சுதா, லக்‌ஷ்மணன், விவேகா, சொற்கோ கருணாநிதி, ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை டி கிரியேசன்ஸ் சார்பில் இயக்குநர் எம்.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 அன்று நடைபெற்றது. 

அந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது…..,

இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர்.இந்தப் படத்தைச் சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர்.இந்தப் படம் வசூல்வேட்டை காண வேண்டும்.இந்தப் படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள்.இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்றார்.

பாஜக அரசியல் பிரமுகர் கரு நாகராஜன் பேசியதாவது…..,

திருமலை மிக தைரியமானவர், அனைத்திற்கும் குரல் கொடுக்கக் கூடியவர். திரைப்படத்தை வாழ வைக்கக் கூடியவர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தான்.திரைப்படங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை அமைப்பாய் இணைந்து அவர்கள் தீர்க்க வேண்டும்.இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே.சதீஷ்குமார் பேசியதாவது……,

ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்தப் படம் சிறப்பாகச் செய்துள்ளது.நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும்.அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழிப் படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசியதாவது…..,

படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்றும் இல்லை.படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது, சிறந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது……,

எல்லா விசயங்களுக்கும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்.இந்தப் படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…..,

நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப் படம் வெற்றிப் பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கக் கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை  படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது…..

இந்தப் படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.இந்தப் படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது……

எனது நண்பன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன், அவன் ஒரு கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர்.இதில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts