பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல்
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார். யார் அந்தப் பெண்? எதற்காகத் தேடுகிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம், யூகி.
திரைப்பட இயக்குநர் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்… பிரபல மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தசரதம். இந்தப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றி
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன்
கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ்,ஜீ 5,ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது.
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர். பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது. ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது. மூன்று மாதங்கள் கடந்தும்
கும்பகோணத்தில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன.அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. அவற்றை விறுவிறுப்பாகச் சொல்ல வந்திருக்கும் படம் வால்டர். முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதலியிடம் குழைவது எதிரிகளிடம்
Presenting You The Video Song Of Varlaam Vaa From Walter Tamil Movie starring Sibi Sathyaraj, Shirin Kanchwala,Samuthirakani and Natty in the lead roles. Music Composed by Dharmaprakash. Vocals rendered by The Legendary Singer Mano. Lyrics penned by Arun Bharathi.
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிசத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் வால்டர்.இதில் சிபிராஜ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்கு இசை தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு இராசாமதி, படத்தொகுப்பு எஸ்.இளையராஜா பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி. இப்படம் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.அதை முன்னிட்டு படக்குழு மார்ச் 7 அன்று படக்குழுவினர்
அன்பான கணவன் மனைவி ஓர் அழகான குழந்தை, நல்ல வேலை சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழும் நடுத்தர குடும்பத்துக்குள் ஒருநாள் பெரும்புயல் வீசுகிறது. அது அக்குடும்பத்திலுள்ள அழகான குழந்தையைக் காவு கேட்கிறது. அந்த சாதாரண குடும்பம் அவ்வளவு பெரும்புயலை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் காட்ஃபாதர். நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக


















