Home Posts tagged Ilayaraja (Page 2)
சினிமா செய்திகள்

ரொம்ப நாள் கழிச்சி பழைய இளையராஜா – சைக்கோ பாடலுக்குப் பெரும் வரவேற்பு

மிshகின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ. இப்படத்தில் நாயகியாக அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளார். மேலும்,நித்யாமேனன், ராம்,சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

கமல் 60 நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி கொடுத்த விலை

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி. அதோடு அவருடைய கலையுலகப் பயணத்தின் அறுபதாம் ஆண்டு. இவற்றையொட்டி நவம்பர் 7 அன்று பரமக்குடியில் கமல் அப்பா சீனிவாசனின் சிலை திறப்புவிழா நடந்தது. நவம்பர் 8 அன்று, சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்புவிழா நடந்தது. நேற்று ( நவம்பர் 17 ) நேரு உள்விளையாட்டரங்கில்
சினிமா செய்திகள்

கமல் 60 விழா – விஜய் அஜீத் கலந்துகொள்ளாதது ஏன்?

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவருடைய கலைப்பயணத்தின் 60 ஆம் ஆண்டு ஆகியனவற்றைக் கொண்டாடும் விதமாக, கலைநிகழ்ச்சியொன்றை நடத்தியது ராஜ்கமல் நிறுவனம். நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய்
சினிமா செய்திகள்

கமல் ஒரு மகாநடிகன் நடமாடும் பல்கலைக்கழகம் – ரஜினி புகழாரம்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) மாலை நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது.இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியுடன் இணைந்தார் ரம்யா நம்பீசன்

பாபுயோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இந்தப் படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில்.சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

கல்லூரி மாணவிகளின் கனவை நனவாக்கிய இளையராஜா

அண்மையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கலகலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள்
விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்பட விமர்சனம்

அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே
சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி

உதயநிதிஸ்டாலின் இப்போது சீனுராமசாமி இயக்கியிருக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன், அட்லியிடம் பணியாற்றிய ஈனோக் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது உதயநிதி புதிய கூட்டணி அமைத்திருக்கிறாராம். துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில்
சினிமா செய்திகள்

இளையராஜா மீது காவல்துறையில் புகார்

இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு
சினிமா செய்திகள்

பத்ம விபூஷண் விருது பெற்றார் இளையராஜா

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும்