அரண்மனை, அரண்மனை ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்ற படங்கள். சுந்தர்.சி இயக்கி நடித்த அப்படங்கள் வெற்றி பெற்றதன் விளைவு இப்போது அப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா,
சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில்
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. பா.இரஞ்சித்தே தயாரிக்கும் அந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலையரசன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன்
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறதாம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. அப்படம் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருசேரச் சந்தித்து வருகிறது. அப்படம் குறித்து வெளியான பல்வேறு விமர்சனங்களுக்கு அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறார் படத்தின் கலை இயக்க்நரும் நடிகருமான கிரண். அவர் கூறியிருக்கும் விளக்கங்கள்….. விமர்சனம் செய்வது என்பதே தவறு.. அதிலும்
இயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான். இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா. மூன்றுக்கும் பொருத்தமாக இருக்கிறார் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இராணுவம் போல் விவசாயமும் ஒரு சேவை.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது. தமிழக
மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்
மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை























