இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம் பறவைகளை விட பூச்சிகள் அதிகம். மனிதர்கள் செய்யும் தவறு காரணமாக பறவைகள் அழிகின்றன, இப்படியே போனால் பூச்சிகள் மனித இன அழிவுக்குக் காரணமாகிவிடும் என்கிற ஆழமான கருத்தைச் சொல்ல சுமார் அறுநூறு கோடி செலவில் வாணவேடிக்கை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.












