சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் சங்கத்திலிருந்து திடீரென சிலர் விலகக் காரணம் என்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2020 நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.

அதுபோலவே டிசம்பர் 5,2020 அன்று அந்தச் சங்கத்தின் அறிமுகவிழா நடைபெற்றது.

அப்போது அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள்….

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – என்.சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – ஜேஎஸ்கே.சதிஷ் குமார்
பொருளாளர் – கே.ராஜன்
துணை தலைவர் – பி.டி.செல்வ குமார்
துணை தலைவர் – ஆர்.சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் -கே.ஜி.பாண்டியன்
இணை செயலாளர் – எம்.அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.ஆர்.சந்திர சேகர்

அதன்பின்,டி.ராஜேந்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவராக நீடிக்கவேண்டுமெனில் இந்தச் சங்கத்தில் த்லைவராக இருக்கவியலாது என்பதால், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு டி.ராஜேந்தரின் மனைவி உஷாராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சங்கத்தின் கெளரவ ஆலோசகராக டி.ராஜேந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

சனவரி 25, 2021 அன்று உஷாராஜேந்தர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் அச்சங்கத்தின் செயலாளராக இருந்த சுபாஷ்சந்திரபோஸ், இணச் செயலாளராக இருந்த அசோக்சாம்ராஜ் ஆகியோர் சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திடீரென இவர்கள் விலகியதற்கு என்ன காரணம்?

இவர்கள் இருவருமே சிம்புவை வைத்துப் படம் தயாரிக்க வேண்டுமென்று விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சிம்புவோ, சிங்காரவேலன் தயாரிப்பில் நடிப்பதாக அறிவித்துவிட்டார்.

அதற்கடுத்தாவது தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு கிடைப்பதாகத் தெரியவில்லையாம். அதனாலேயே அவர்கள் சங்கத்திலிருந்தே விலகிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts