சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படப்பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தயாராகியிருக்கிறது.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை இன்று (பிப்ரவரி 2,2019) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்தப்படத்துக்கு முதலில் ஜித்து ஜில்லாடி என்று பெயர் வைத்திருந்தார்கள்.

கடைசி நேரத்தில் அந்தப் பெயரை மாற்றிவிட்டு மிஸ்டர் லோக்கல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப்பெயரையும் முதல்பார்வையையும் வெளியிட்டிருக்கிறார்கல்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts