தந்தை நினைவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி – கலங்கும் ரசிகர்கள்
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார்.
அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு, என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது..living wit his memories every second..I think I’m not lucky enough to live many years wit my role model & biggest inspiration..Miss u pa…
என்று நெகிழ்வுடன் பதிவிட்டிருக்கிறார்.
பெரிய உயர்த்தைத் தொட்டாலும் இழப்பின் வலியை அவர் வெளிப்படுத்தியுள்ள விதம் அனைவரையும் கலங்கவைத்திருக்கிறது.
நாங்க இருக்கோம் கவலைப்படாதீர்கள் என்று அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.











