காப்பான் படத்தின் தெலுங்குப் பெயர் வெளியாவதில் தாமதம் ஏன்?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர்.
இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காப்பான் படத்தின் தெலுங்குப் பெயரை நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
நேற்று நடிகை விஜயநிர்மலா திடீர் மறைவையொட்டி அதை வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் இன்று காலை காப்பான் படத்தின் தெலுங்குப்பெயர் வெளியானது.
தெலுங்கில் பந்தோபஸ்து என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதை பிரபல இயக்குநர் எஸ்,எஸ்.ராஜமெளலி பகிர்ந்திருக்கிறார்.











