சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் – அசத்தும் சிம்பு

ஹாட்ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

அவருக்கடுத்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பவர் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லையெனினும் அவர் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

இந்நிகழ்ச்சி இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கவிருக்கிறதாம்.

அதனால் இந்நிகழ்ச்சிக்காக ஐந்து நாட்கள் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி சிம்புவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

அந்த ஐந்து நாட்களுக்காக அவருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் ஐந்து கோடி என்று சொல்லப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு கோடி என்கிற கவர்ச்சிகரமான வாய்ப்பைக் கொடுத்ததால் சிம்பு ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

சிம்பு கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அவருக்குக் கூடுதல் வரவேற்பு கிடைத்தால் கமலுக்கு ஆபத்து இருக்கிறது.

Related Posts