October 30, 2025
சினிமா செய்திகள்

பாதியில் நின்ற சுந்தர்.சி படப்பிடிப்பு – சிம்புதான் காரணமா?

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

அப்படத்தை இப்போது தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது.அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வந்தவர்கள் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தது.

நவம்பர் முதல்வாரம் வரை படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுச் சென்றவர்கள் கடந்த இரண்டுநாட்களுக்கு முன்பாக சென்னை திரும்பிவிட்டார்களாம்.

பாதியில் வந்ததற்குக் காரணம் சிம்புதானாம். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று காத்திருந்து ஏமாற்றமடைந்தார்களாம். அவர் ஒரு வாரமாவது முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் படப்பிடிப்புக் குழுவினர் சென்னை திரும்பிவிட்டார்களாம்.

சிம்பு நடிக்கும் படம் திட்டமிட்டபடி முடிந்தால்தான் ஆச்சரியம்.

Related Posts